அல்பர்ட் (Albert), மாதத்திற்கு ஒரு முறையாவது தனியாக ட்ரக்கிங் செல்லும் பழக்கத்தை கொண்டவன்
ஒருநாள், மற்ற எல்லோரும் பயந்து தவிர்க்கும் ஒரு அடர்ந்த காடிற்கு தனியாக பயணம் செய்ய முடிவு செய்தான். அந்த இடம் குறித்து ஒரு அபாயகரமான வரலாறு இருந்தது – “சூரியன் மறைந்த பிறகு அங்கு ராட்சதங்கள் சுற்றித்திரிவார்கள்” என கூறப்படுகிறது.
ஆனால் அல்பர்ட் பயப்படவில்லை.
அந்தக் காடினுள் பல இடங்களைத் தன்னிச்சையாகச் சுற்றிப்பார்த்தான்.
வரைபடத்தில் கூட இல்லாத ஒரு இடத்தை கண்டான்.
அந்த இடம் மிகவும் அழகாக இருந்ததது, திடீரென சூரியன் மறையத் தொடங்கியது அங்கேயே தங்க ஒரு கூடாரத்தை அமைக்க முயன்றான்.
அதே நேரத்தில் வழக்கத்துக்கு மாறாக சில சப்தங்கள் கேட்க ஆரம்பித்தது. ஒடனே அங்கிருந்து பதட்டத்துடன் நடக்க ஆரம்பித்தான்.
நள்ளிரவு – 11:30 ஆகிவிட்டது – ஒருவழியாக ஒரு பழைய குடிசையை அல்பர்ட் கண்டுபிடித்தான்.
உடனே உட்புகுந்தான். ஆனால் அவனுடைய டார்ச் பேட்டரி இறந்துவிட்டது.
மாற்று பேட்டரி எதுவும் இல்லை. பேட்டரி இருந்த பை எங்கோ விழுந்து விட்டது. இருட்டில் எப்படியோ ஓர் இடம் பார்த்து தூங்க முற்பட்டான்.
அவனது பார்வைக்கு அந்தக் குடிசையின் சுவர்களில் நிறைய படங்கள் தொங்கிக் கிடந்தன. எல்லா படங்களிலும் கொடுரமான பேய் இருந்தது.
அந்த படங்களில் உள்ள உருவங்கள் அவனை நேராகப் பார்த்துக் கொண்டிருந்ததுபோல் தெரிந்தது.
அவனை ஓரளவு பயமுறுத்தின.
ஆனால் அவன் அதை வெறும் படம் என எண்ணி தூங்கிவிட்டான்.
அடுத்த நாள் காலை எழுந்தபோது, கதிரவனின் ஒளி குடிசை முழுக்க நிரம்பி இருந்தது.
தூங்கும் இடத்திலிருந்து எழுந்து சுற்றிப் பார்த்தபோது அவனது ரத்தமெல்லாம் உறையும் அளவுக்கு பாய்ந்து போனான்.
ஏனென்றால்,
இரவில் “படங்கள்” என எண்ணியவை – உண்மையில் அந்த குடிசையின் ஜன்னல்கள்.
இரவு அந்த ஜன்னல்களில் இருந்த பயங்கரமான உருவங்கள் “படங்கள்” அல்ல மாறாக எல்லாரும் பயப்படும் அந்த “கொடூர மிருகங்கள்”, அது அவனை இரவு முழுவதும் அவனை பார்த்துக் கொண்டே இருந்தன.
அந்த நிமிடத்தில் அவனுக்குப் புரிந்தது – (அந்த காட்டின்) உண்மை முகம்!