ஒரு கிராமத்தில் ஒரு ஏழை ஒருவன் இருந்தான் . அவனிடம் இரண்டு மண் குடங்கள் இருந்தது. ஒரு குடம் சரியாக இருந்தது. இன்னொரு குடம் கொஞ்சம் வெடித்திருந்தது.
அவன் தினமும் அந்த இரண்டு குடங்களிலும் நதியில் இருந்து நீர் எடுத்து, வீட்டுக்கு கொண்டு வருவான். ஆனால் வெடித்த குடத்தில் இருக்கும் நீர் பாதி வரும் வழிலேயே சிந்திவிடும் .
ஒருநாள் அந்த வெடித்த குடம் பேசியது:
“ஐயா என்னை மன்னித்துவிடுங்கள், என்னால முழுசா வேலை செய்ய முடியலை. என்னால பாதி தண்ணிக்கு மேல கொண்டு வரமுடியல எல்லாமே கீழ சிந்திடிச்சின்னு” சொல்லி வருத்தப்படுத்து
அந்த ஏழை சிரிச்சிகிட்டே சொன்னான்:
“நீ உன் பக்கம் இருக்கும் பூக்களை பார்த்தியா? நான் அங்க விதைகளை வைத்தேன். நீ வழியிழக்கும் நீர் தான் அந்த பூக்களை வளரச்செய்தது. அந்த அழகான பூக்களை நான் சந்தையில் வித்த்து லாபம் பார்ப்பேன். நீ நல்லதே பண்ற.”
“ஒவ்வொருவரும் தனித்த தன்மையுடன் இருக்கிறோம். நம்முடைய குறைகள் கூட, பிறருக்கு நன்மை செய்யலாம்.“