Bravo Pub🍻
நிலன் தன்னை முழுதாக தொலைக்கவே இங்கே வந்தான்…
தான் காதலித்து தனது வாழ்க்கையை தொலைத்து தன்னை இத்தனை வருடமாக தேட வைத்து இறுதியில் அந்த தேடலுக்கு சொந்தமானவள் அவள் இல்லை
தன்னுடைய கனவுகளுக்கு சொந்தம் அவள் இல்லை என்று தெரிந்த அடுத்த நிமிடம் நிலன் சுக்கல் சுக்கலாக உடைந்து போயிருக்க வேண்டும்..ஆனால் ஏன் அவன் மனம் உடைய வில்லை என்று தெரியவில்லை…
தன்னுடைய மனம் அப்போ எதை தேடி கொண்டிருக்கிறது .. என்று தெரிந்து கொள்ள தான் தன்னை மறக்க இங்கு வந்தான்..
ஆனாலும் இவள் அங்கு வரவில்லை என்றால் அப்போ யார் கூட நான் அன்னைக்கு இருந்தேன்..
இதுக்கெல்லாம் பதில் பிறையிடம் மட்டும் தான் என்று …வண்டியை கிளப்பினான் .. பிறையின் வீட்டிற்க்கு.
பிறை வீடு…..
Calling bell வீட்டு வாசலில் அடித்து கொண்டே இருக்க….
பிறை ஓட அம்மா போய் கதவை திறக்க போறாங்க. … யாரு 12 மணிக்கு வந்து காலிங் பெல் அடிச்சிட்டே இருக்குறது.  …???
கதவை திறந்த உடன் எதிரில் நின்று உள்ளவனை பார்த்து கோவப்படுவதா? இல்ல மகிழ்ச்சி கொள்வதா? என்று ஒரு கணம் அவர்களுக்கும் புரிய வில்லை.  ..அம்மா sorry நான் உடனே பிறைய பார்க்கணும்..அவளோட ரூம் எங்க இருக்கு கொஞ்சம் சொல்லுங்க pls???..
அவர்களுக்கு என்ன கூறுவது என்று தெரியாமல் இடப் பக்கம் என்று கையை மட்டுமே நீட்டினார்கள்
பிறை தன்னுடைய தூங்கும் குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு ஜன்னல் வழியே அந்த நிலவினை பார்த்து கண்ணீர் விட்டு கொண்டிருந்தாள்..
திடீரென கதவை திறந்த உடன் .. நிலன் நேராக சென்று அவளுடைய கண்களை மட்டுமே பார்த்து பேசினான்.

பிறையும் தான் காண்பது கனவா ? இல்லை நினவா என்று ஒரு நிமிடம் யோசித்துக் கொண்டிருந்தாள்…
அவளுடைய இரு தோள்களையும் பிடித்து பிறை நான் கேக்குறதுக்கு உண்மைய மட்டும் சொல்லு ….
அன்னைக்கு அனா அங்க வரலனு உன் கிட்ட சொன்னாலா??
ம்ம் … மட்டுமே அவளுடைய பதில்.
அப்போ நீ ஏன் என் கிட்ட சொல்லல??
இத்தனை நாள் ஏன் என் கிட்ட சொல்லல?
நான் அவல தேடி பைத்தியக்காரத்தனமா அலஞ்சுட்டு இருக்கேன்னு உனக்கு தெரியும் தானே ?? ஏன் சொல்லல பிறை சொல்லு…
அய்யோ அப்போ அன்னைக்கு என் கூட இருந்தது யாரு??
ஹ்ம்ம்ம்ம் எனக்கு தலையே வெடிக்கிறது மாறி இருக்கு….அப்படினு கத்தி சத்தம் போடுறான்…. .
உடனே பிறை ஓட மடில இருந்த அம்மு அழுக ஸ்டார்ட் பண்றா .. தூக்கத்துல….
அப்போ தான் நிலன் அவளோட மடில இருந்த கொழங்தைய பாக்குறான்…
அந்த கொழங்தைய பிறை மறுபடியும் தூங்க வெச்ச்ட்டு இருக்கிறா… உடனே அவ மடி ல இருந்த குழந்தைய தூக்கி நல்ல பாக்குறான்..
அவனோட கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீர் கீழ விழுது….
அப்போ.. பிறை .. நிலா .. அது வந்து .. அது வந்து… இவ என்னுடைய கொழங்தை… எனக்கும் .. இன்னொரு பையனுக்கும் பிறந்தவனு சொல்ல வந்ததும்… அவளுக்கு பளார் அப்படினு ஒரு அடி கன்னத்துல கொடுக்கிறான்… நிலா…



பிடிச்சிருந்தா கமென்ட் பண்ணுங்க…
Wait for next ud .. guys

Previous post நிலனின் காதலி – part 4
Next post நிலனின் காதலி – part 6

3 thoughts on “நிலனின் காதலி – part 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *